இடுகைகள்

டிசம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிலம் வாங்கப் போறீங்களா ?

படம்
நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning - DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வேறுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CDMA) உடைய அதிகார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும். டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டீ.டி.சி.பி. அப்ரூவலுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. அப்ரூவல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இது தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். இதில் லே-அவுட் ஒரு கிர