இடுகைகள்

மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு ! உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் அ.இ.அதிமுக உடன்கூட்டணி !

படம்
மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயற்குழு 17.9.2011 அன்று கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இதில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான ம் : 1 , நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்த அ.இ.அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, அ.இ.அதிமுகவை ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்களுக்கு செயற்குழு நன்றி தெரிவித்து கொள்கிறது. மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட 3 தொகுதிகளில் ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்து வெற்றிக்குப் பாடுபட்ட அதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, பார்வார்ட் ப்ளாக், இந்தியக் குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், ஜமாத்துல் உலமா சபை உள்ளிட்ட சமுதாய அமைப்புகளுக்கும் இச்செயற்குழு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. கூட்டணிக்கு அப்பாற்பட்டு இருப்பினும் ம.ம.க வேட்பாளர்களை ஆதரித்த ம.தி.மு.க.விற்கும், நாம் தமிழர...

இந்திய - நேபாள எல்லை பூகம்பத்தில் பலர் பலி !

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிம்மை ரிக்டர் மானியில் 6.8 புள்ளிகள் வலுவுள்ள பூகம்பம் ஒன்று தாக்கியிருக்கிறது. இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட நில அதிர்வுகள் நேபாளத்தில் பல இடங்களிலும், வங்கதேசத்திலும், பிற இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன. முழுமையான ஆட்சேதம் பொருட்சேதம் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.இந்தியா நேபாள எல்லைப் பகுதியியில் உள்ள மலைகளில் இந்த பூகம்பத்தின் மையம் அமைந்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் சொல்கின்றன. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும், வங்கதேசத் தலைநகர் தாக்காவிலும் நில அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே பூகம்பத்தால் நேபாள தலைநகர் காத்மண்டுவில் பிரிட்டிஷ் தூதரக சுவர் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. சிக்கிம், பீஹார், காத்மாண்டுவிலும் பலர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இதில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பலர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சி.பி.ஐ. விசாரணை தேவை ! திருமாவளவன்

படம்
பரமக்குடி படுகொலைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பரமக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட தாக்குதல் சம்பவம். ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு காரணமான போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்கள் பயம் இல்லாமல், பாதுகாப்புடன் வாழ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை, அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார். இந்நிகழ்வில் பேரா.சுபவீ, விடுதலை ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் ரவிக்குமார், வன்னியரசு, உஞ்சையரசன், எஸ்.எஸ்.பாலாஜி, வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டசபை கூட்டம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

படம்
2011 ஏப்ரல் 13- ஆம் நாள் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த 14- ஆவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் 2- ஆவது கூட்டம் 4-8-2011 முதல் (14-9-2011) வரைநடைபெற்றது பேரவை கூடிய மொத்த நாள்கள் 33, கூட்டம் நடைபெற்ற மொத்த நேரம் 132 மணி 14 நிமிடம். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பதிலுரை ஆற்றிய நேரம் 1 மணி 18 நிமிடம். முதலமைச்சர் தனது பொறுப்பில் உள்ள துறைகள் சம்பந்தமாக பதிலளித்த நேரம் ஒரு மணி 10 நிமிடம். இதர துறைகள் தொடர்பான விவாதங்களிலும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உடனுக்குடன் முதலமைச்சர் விளக்கம் அளித்த நேர்வுகள் 38. அனுமதிக்கப்பெற்ற வினாக்கள் கேட்டவர்களில் முதல் 5 நிலைகளில் இருப்பவர்கள்- எஸ்.பி. முத்துக்குமரன் (இந்திய கம்யூனிஸ்டு) -1,129, ம.குணசேகரன் (அ.தி.மு.க.)- 593, சி.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)-267, ப.விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.) - 249 கே.உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு)- 241 அவையில் அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்களில் முதல் 5 நிலைகளில் இருப்பவர்கள்- அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செந்தில்பாலாஜி - தலா 10, அமைச்சர்கள் ...

முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர முஸ்லீம் லீக் கோரிக்கை !

சிறுபான்மையிரான முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்கனவே உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்தி வழங்குமாறு தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில் தேசிய செயலாளளர் குர்ரம் அனிஸ் உமர் முன்னிலை வகிக்க கும்பகோணம் திருமங்கலக்குடியில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவராக பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், பொதுச் செயலாளராக முகமதுஅபுபக்கர், பொருளாளராக ராமநாதபுரம் ஷாஜகான் மற்றும் செயலர்கள், துணை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்: தமிழக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 10 சதவீத இடங்களை கேட்டுப் பெறுவது, தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டணியில் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசியல் ஆலோசனை குழுவிற்கு முழு அதிகாரம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிற...
படம்