இடுகைகள்

எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராதா தோழர் திருமா வளவன் அவர்களின் தொப்புள் கொடி உணர்வு பாராட்டகூடியது ! ! !

படம்
தொப்புள் கொடி உறவுகளின் ஆதரவோடு பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை ! ! ! எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராதா தோழர் திருமா வளவன் அவர்களின் தொப்புள் கொடி உணர்வு பாராட்டகூடியது ! ! ! பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர், பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுத ான் இதன் நோக்கம். இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது. மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, ப...

லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக !

படம்
மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும். அல்லாஹ் கூறுகிறான்:மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188) நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்) சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது. இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம். ...

ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம் சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது !

படம்
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ்ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது. குஜராத்தில் அகமதாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத்தில் கடந்த 2004 இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் மும்பையிலிருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்ததாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறையினரிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப்பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறிவித்த என்க...

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் முதலாவது அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் !

படம்
பரமக்குடி (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் முதலாவதாக டாக்டர் எஸ்.சுந்தரராஜனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி - கூரிச்சாத்தி தம்பதியின் மகன் சுந்தரராஜ். 18.4.1950-இல் பிறந்தார். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இவர், பரமக்குடியில் பொது மருத்துவமனையும், இவரது மனைவி டாக்டர் எஸ்.சரோஜினிதேவி குழந்தைகள் நல மருத்துவமனையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரமேஷ்குமார் (32) என்ற மகன் உள்ளார். மருத்துவமனைகளுடன் கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. பரமக்குடி நகரில் வாழும் அனைத்து சமூக மக்களிடமும் அன்போடும், சகோதர மனப்பான்மையுடனும் நடந்து கொண்ட இவர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவையும் செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இவர், 1980-இல் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக பிரிந்தபோ...

முஸ்லிம்கள் மீது படு கொலை தாக்குதல் நரேந்திர மோடி குற்ற வாளியே ! உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!

படம்
2002 இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் கள் படுகொலைத் தாக் குதல்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான ஆதாரங்களை, ஜகியா ஜஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் (அமிகஸ் குரியா) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை தந்திருக்கிறது. ரகசிய ஆவணம் அந்த அறிக்கை இன் னமும் ரகசிய ஆவண மாகத்தான் பாதுகாக் கப்பட்டு வருகிறது. என் றாலும், 1200 பேருக்கும் மேலானவர்கள் கொல் லப்பட்ட 2002 ஆம் ஆண்டு வன்முறைத் தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்து தகுந்த குற்றவியல் நட வடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட சிறப்பு விசா ரணைக் குழுவுடன் அமி கஸ் குரியா வழக்கறி ஞரின் அறிக்கையின் தகவல்கள் இப்போது பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன. நரேந்திர மோடி மீது எந்த வழக்கும் தொடர முடியாது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி வித்து இருந்த கருத்தை வழக்குரைஞரின் அறிக்கை ஏற்றுக் கொள்ள பலமாக மறுக் கிறது என்று அகமதா பாத்தில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் பிரபல ஓர் ஆங்கில நாளிதழுக்கு தெரிவிக் கின்றன. இந்துக்கள் தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்ள அனு மதிக்க வேண்டும் என்று காவல் த...

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

படம்
பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கடந்த வாரம், பத்திரிக்கையாளர்களோடு சந்திப்பு நடத்தி அதில் உரையாற்றினார். அவரது இந்த உரை, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் படிக்க வேண்டியது. முக்கியத்துவம் கருதி, மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன். தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் ப...

ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.!

படம்
ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும். அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு ...

விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற முஸ்லிம் மேல் நிலை பள்ளி !

படம்
ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லிம் மேல் நிலை பள்ளி பரமக்குடி கல்வி மாவட்ட அளவில், கமுதி அருகே பெருநாழியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவ-மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில், பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14, 17, 19 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழ், கேரம், டேக்வாண்டோ, எறிபந்து, சிலம்பம், நீச்சல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று மொத்தம் 301 புள்ளிகளைப் பெற்றனர். தனித்திறன் போட்டியில் டி. அஜித்குமார் என்ற மாணவன் 100, 200 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று, தனித்திறன் போட்டிக்கான சாம்பியன் பட்டம் வென்றார். ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற இப்பள்ளிக்கு, திங்கள்கிழமை பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஜே.ஆர்.ஐசக் சுகிர்தராஜ், அப்பள்ளித் தாளாளர் எம். சாதிக் அலியிடம் கேடயத்தை வழங்கினார். பின்னர் அவர், வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆச...

கிரண் பேடி அவர்கலே .........அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ? ? ?

படம்
அன்னா ஹசாரே போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கிரண் பேடி பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அரசியல்வாதிகள் ஊழல் பேர்விழிகள் என்றும், அன்னா ஹசாரேதான் இந்தியாவின் விடிவெள்ளி என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் பேசினார். அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ? உங்களின் கடந்த கால தவறுகள் எப்படி இருந்தாலும், தோண்டி எடுத்து கண்டு பிடிக்கப் பட்டு விடும். மிக மிக கவனமாக, அது வெளியில் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், நிச்சயமாக அது கண்டுபிடிக்கப் படும். அப்போது, நீங்கள் பேசிய பேச்சுக்களும், எடுத்த நிலைபாடுகளும் உங்கள் முகத்தில் அறையும். இத்தனை நாட்களாக நீங்கள் கவனமாக கட்டிக் காத்து வந்த உங்களின் இமேஜ் சரி செய்ய முடியாத அளவுக்கு அதள பாதாளத்தில் வீழ்ந்து போகும். அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. 1979ம் ஆண்டில் கிரண் பேடிக்கு வீரதீரச் செயல் புரிந்ததற்கான விருது வழங்கப் பட்டுள்ளது. பிப்ரவரி 2001ல் வெளியான சுற்றறிக்கையின் படி, வீர தீர விருது பெற்றவர்களுக்கும், அவரோடு பயணம் செய்யும் ஒருவருக்கும், ஏர் இ...

ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் !

படம்
ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எமேனேஸ்வரம் ஜாமத்தை சார்ந்த இரண்டு கவுன்சிலர்கள் இரு வேறு வார்டுகளில் தேர்ந்து எடுத்து உள்ளர்காள் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கு இவர்கள் பெற்ற வாக்கு விபரம் 3 வார்டு- நூர்ஜஹான் அ தி மு க -592 ,சர்மிளா ராணி -தி மு க -382 ,கமிலா பீவி மு லீக் 101 அதை போன்று 14 வது வார்டில்- அப்துல் மாலிக் -356 ,சரவணன் பி ஜெ பி -325 சரவவணன் தி மு க 229 ,மேலும் பரமக்குடி நகராட்சி இல் மொத்தம் 4 முஸ்லிம் கவுன்சிலர்கள் தேர்ந்து எடுத்து உள்ளர்கால்

தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால்,..............

படம்
அக்.17: தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணித்தனர்.கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும், 4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்பு...

கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய.....................

படம்
கூடங்குள அணு உலைகளுக்குத் தமிழ்நாடு அரசு அளித்த அனுமதியில் இருந்து வெளிப்பட்ட விபரீத உண்மை 1988 நவம்பர் 20 ஆம் தேதியன்று சோவியத் அதிபர் திரு . கோர்பச்சேவும் இந்தியப் பிரதமர் திரு . ராஜீவ் காந்தி அவர்களும் கூடங்குள அணுமின் திட்டத்தில் கையெழுத்திட்டனர் . தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த அந்த நாளில் ஆளுனராகப் பதவி வகித்தவர் திரு . பி . சி . அலெக்சாண்டர் . 1989 ஜனவரி 29 இல் தி . மு . க . ஆட்சி அமைத்தது . ஆட்சி அமைத்த 18 வது நாளில் - அதாவது 16-2-1989 அன் று தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை கூடங்குள அணுமின் திட்டத்திற்கான தன் அனுமதியை வழங்கியது . அந்த அனுமதியில் கையொப்பமிட்டவர் தமிழக அரசின் செயலாளராக இருந்த திரு . D. சுந்தரேசன் IAS. அவர் வழங்கிய அனுமதியானது தமிழக அரசிற்கு அணு உலைகள் குறித்து இருந்த அறிவின்மையையும் , அசிரத்தையையு ம் வெளிப்படுத்துவதாக அமைந்தது . இரண்டு 1000 மெகாவாட் வி . வி . ஈ . ஆர் அணு உலைகளுக்கே அணுசக்தித் துறை அனுமதி கோரியிருந்தது . ஆனால் தமிழக அரசோ எவ்வளவு மெகாவாட் அணு உலைகளுக்கு என்றெல்லாம் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அணு உலைகளுக்கு அனுமதியை வழங்க...

அன்னா ஹசெற வின் மௌன விரதம் ? நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ! ! !

படம்
காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே தீடீரென்று மெளன விரதம் இருக்க போவதாக சொன்னார். அதைக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், "கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அன்னா குழுவில் உறுப்பினராக உள்ள பிரசாந்த் பூஷன் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்க்கவே அன்னா மெளனவிரதம் இருக்கிறார்" என்று கூறினார். "காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே ஏன் பி.ஜே.பிக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை" என்று கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், "குஜராத்தில் கடந்த 9 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா இல்லாமல் இருந்த போதும் அதைக் குறை கூறாமல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அன்னா புகழ்ந்தது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினார். "இது மாதிரி செயல்பாடுகளை இரட்டை நிலைப்பாடு என்று சொல்லாமல் எப்படி சொல்வது?" என்று கேட்ட திக்விஜய் சிங், "அன்னா, தனக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருக்கிறது என்பதை ஒப்பு கொள்ள ஏன் மறுக்கிறார்?" என்றார். "அன்னாவோ தன் போராட்டத்தில் ஒரு ஆ...