பர்தா அணிவதனால் ஏற்படும் நன்மைகள் !


நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக,
  1. பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
  2. தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள்.

இவ்விரண்டு நன்மைகளுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்தமானதாகும்.

நன்கு சம அழகுள்ள இரு இரட்டைபிறவி சகோதரிகள் கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தையல்லவா திருமறை கூறியிருக்கிறது.

பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது.

பெண்ணியவாதிகள் மலிந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் தான் இன்றைய காலகட்டத்தில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதையும், மேலும் கற்பழிப்பு, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் இன்று உலகிலேயே பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்ததாக பிரான்ஸ் நாடு இருக்கின்றது. இங்கெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதற்குக் காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் உடைகளை பெண்கள் அணிவதாலேயாகும் என்று ஆய்வறிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

இதற்கு நேர் மாற்றமாக பெண்களை பர்தா அணிய வைத்து கொடுமைப் படுத்துகிறார்கள் என மேற்கத்திய செய்தி ஊடகங்களினால் விளம்பரப்படுத்தப்படும் நாடான சவூதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் அறவே நடைபெறுவதில்லை என்று அதே ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதற்கு காரணம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என்ற சட்டமும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான கடுமையார்ன ஷரீஅத் சட்டமும் அமலில் இருப்பதேயாகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?