தலைமை ஆணையிட்டால் எந்த முடிவையும் ஏற்போம் ! விரைவில் மமக வேட்பாளர் பட்டியல் ! ! !




மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தன. அவற்றை ஆய்வு செய்து நேர்காணல் நடத்த மமக துணைப்பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக துணைப்பொதுச்செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.ஹனீபா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு சென்னை, ஈரோடு, திருவாரூர், நெல்லை, ஓசூர், மதுரை ஆகிய ஊர்களில் மாவட்டங்களை 6 மண்டலங்களாகப் பிரித்து அந்த மண்டலங்களில் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வரவழைத்து நேர்காணல் நடத்தியது
6 நகரங்களிலும் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சிகள் பெரும் திருவிழாப் போல நடைபெற்றது.நகரமெங்கும் கொடிகள், வரவேற்பு பேனர்கள், பத்திரிக்கைச் செய்திகள் என கட்சியினர் உற்சாகமான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இது அங்கு வருகை தந்த விண்ணப்ப வேட்பாளர்களையும், கட்சியினரையும் மகிழ்ச்சியிலும், எழுச்சியிலும் ஆழ்த்தியது.காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல்கள் சென்னையில் இரவு 1மணி வரையிலும், மற்ற நகரங்களில் இரவு 11 மணி வரையிலும் நீண்டது.



முஸ்லிம்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்க சரியான கட்சி மனிதநேய மக்கள் கட்சிதான் என முடிவு செய்துள்ளதை நேர்காணலுக்கு வந்த கூட்டம் நிரூபித்தது.நேர்காணலுக்குப் பிறகு 26.9.11,திங்கள் அரசியல் பரபரப்புகளுக்கு அன்று மத்தியில் வேட்பாளர் இறுதிப்பட்டியல் தயாரானது.

ஒரே வார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் அங்கேயே, தங்களுக்குள் விட்டுக்கொடுத்து மனுக்களை பெருந்தன்மையோடு வாபஸ் பெறுவதும் நடைபெற்றது.



பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், செ.ஹைதர் அலி, ப.அப்துல் சமது, ஹாரூண் ரஷீது, ஜெ.எஸ்.ரிபாயி, எம்.தமிமுன் அன்சாரி, பி.எஸ்.ஹமீது, குணங்குடி ஆர்.எம்.ஹனீபா ஆகியோர் கொண்ட குழுவினர் பல்வேறு கட்ட முடிவுகளுக்கு பின்னர் பட்டியலைத் தயார் செய்து வருகின்றனர்.

கூட்டணியா? தனித்தா? என்பது பற்றி கவலைப்படாமல், தலைமை ஆணையிட்டால் எந்த முடிவையும் ஏற்போம் என நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் குறிப்பிட்டது கட்சியின் மீதும், செயல்பாடுகள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக இருந்தது.


ன்ரி :தமிமுன் அன்சாரி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?