தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் தனி சட்டப் பிரிவு !

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக, அவர்களின் நிலை, பிரச்னைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி, 110 பரிந்துரைகளை மத்திய அரசிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்தது. இதில் ஒரே ஒரு பரிந்துரைதான் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.இப்போது மீண்டும் சிறுபான்மையினரின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, சச்சார் கமிட்டி, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி ஆகிய 2 கமிட்டிகளும் அளித்த பரிந்துரைகளிலிருந்து, 15 பரிந்துரைகள் அடங்கிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.இந்தத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் வகையில் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதாவது, இந்த திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக, தனி சட்டப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது என்று அதன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற "தேசிய சிறுபான்மையினர் கமிஷன் மற்றும் பெண்கள் கல்விக்கு கமிஷன் எடுத்து வரும் முயற்சிகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?