ராமநாதபுரத்தில் அரசு நல திட்ட உதவீகள் வழங்கும் விழா ! ம ம க M .L . A வழங்கினார் !!
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின் பொருட்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு லேப்டாப்&பும் வழங்கப்படும் என அதிமுக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த வகையில் கடந்த 15.09.2011 அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உச்பிப்புளி, அச்சடிபிரம்பு ஆகிய கிராமங்களில் 17.09.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களுக்கு மின்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய மின்பொருட்களும், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப்&புகளும் வழங்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இப்பொருட்களை வழங்கினார்.
கருத்துகள்