விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற முஸ்லிம் மேல் நிலை பள்ளி !

ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லிம் மேல் நிலை பள்ளி

பரமக்குடி கல்வி மாவட்ட அளவில், கமுதி அருகே பெருநாழியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவ-மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

இதில், பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14, 17, 19 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழ், கேரம், டேக்வாண்டோ, எறிபந்து, சிலம்பம், நீச்சல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று மொத்தம் 301 புள்ளிகளைப் பெற்றனர்.

தனித்திறன் போட்டியில் டி. அஜித்குமார் என்ற மாணவன் 100, 200 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று, தனித்திறன் போட்டிக்கான சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற இப்பள்ளிக்கு, திங்கள்கிழமை பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஜே.ஆர்.ஐசக் சுகிர்தராஜ், அப்பள்ளித் தாளாளர் எம். சாதிக் அலியிடம் கேடயத்தை வழங்கினார்.

பின்னர் அவர், வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், ஜமாத் சபை தலைவர் ஏ. முகம்மது சரிப், செயலர் எம். சாகுல்ஹமீது, தலைமையாசிரியர் எம். அஜ்மல்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

ABU MUJA இவ்வாறு கூறியுள்ளார்…
ella puhalum valla iraivanuuku ithai pondru thamailaghattil ulla anaithu muslim school ghalum anaithu thuraielum mudal idathirkku vara vendum anbudan paramakkudi tholan

py
paramakkudi tholan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?