வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசாதீர் !

தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப் பட்டுள்ள மொபைல் போன் இல்லாதவர்களே இன்று இல்லை எனலாம். நமது வசதிக்காக வரப்பிரசாதம் போல் கிடைத்து உள்ள இவற்றை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். நமக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனத்தை நம் உயிருக்கு உலை வைக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களை ஒட்டிச்செல்லும் போது மொபைல் பேசுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆங்காங்கே ஏற்படும் விபத்துக்களுக்கு மொபைல் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் காரணமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரும், கார், லாரி டிரைவர்களும் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. ஒவ்வொரு வாகன விதிமீறல் களையும் சட்டம் போட்டு தடுப்பது என்பது இயலாத காரியம். தங்கள் உயிர்,குடும்பம் மேல் அக்கறை உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் விபத்துக்கள் குறையும்.

சாலையோர விளம்பரப் பலகை விழிப்புணர்வு ஊட்டினாலும் அதை மதியாமல் சாய்த்த தலைக்கும் தோளுக்குமிடையே வைத்த செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைந்தபாடில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது தாம் மட்டுமல்ல மற்றவர்களும்தான் என்பதை எண்ணிப் பார்த்தாவது சம்பந்தப்பட்டோர் வாகனங்கள் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

முஸ்லிம்கள் மீது படு கொலை தாக்குதல் நரேந்திர மோடி குற்ற வாளியே ! உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!

தேவர் ஜெயந்திக்கு கவனம் ? இமானுவேல் நினைவு நாளுக்கு மெத்தனம் ! ! !