நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்வோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு ! ! !

வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயரைச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பின்னரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மேயர் வேட்பாளர் காதர் பீவி பெயர் சேர்க்க படாததால் நெல்லை மாநகராட்சி தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட் சித் தேர்தல் அக். 17, 19 ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சிக்கு அக். 17ம் தேதி தேர்தல் நடத்தப்படு கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முடிவடைந்தது.
திமுக, அதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், காங் கிரஸ், தேமுதிக உட்பட 17 பேர் மனுத்தாக்கல் செய் துள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் வேட்பாளராக மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலியின் புதல்வி காதர்பீவி மனு தாக்கல் செய்துள்ளார்.
இவரது வாக்காளர் பெயர் கணவர் ஊராகிய தென்காசி வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதனை நீக்கி விட்டு சொந்த ஊரான திரு நெல்வேலியில் வாக்காள ராக பதிவு செய்யுமாறு முறைப்படி மனுச் செய்தார்.
அதன்பின் மேயர் பதவிக்கான வேட்பு மனுவை மாநகராட்சி கமிஷனர் அஜய் யாதவி டம் தாக்கல் செய்தார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந் தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் காதர்பீவியின் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மேலிடப் பார்வையாள ராக விரைந்து சென்ற காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தலைமை யில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் எஸ். கோதர்மைதீன், மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்ட செய லாளர் எல்.கே.எஸ். மீரான் மைதீன், மாவட்ட அமைப் புச்செயலாளர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, வர்த்தக அணிச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலி மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறை யிட்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் செல்வ ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தான் எதுவும் செய்ய இயலாது என்றும், வேட்புமனுக்களை ஏற்பதும் ஏற்காததும் தேர்தல் அதிகாரியின் முடிவைப் பொறுத்ததே என ஆட்சியர் கூறினார்.
தேர்தல் அதிகாரி அஜய் யாதவ் இன்று காலை (1.10.2011) 11 மணிக்குள் திருநெல்வேலி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க் கப்படவில்லை எனில் இ-யூ.முஸ்லிம் லீக் வேட்பா ளரின் மனு ஏற்கப்படாது என அறிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., கூறியதாவது:
`இந்திய யூனியன் முஸ் லீம் லீக் வேட்பாளராக நெல்லை மேயர் பதவிக்குக் காதர்பீவி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இவரது பெயர் நெல்லை மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இல்லாததால் தென்காசியில் பெயர் நீக்கம் செய்யக் கோரியும், நெல்லை மாநகராட்சி 44வது வார்டில் பெயர் சேர்க்கக் கோரியும் விண் ணப்பம் அளித்துள்ளார்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக் குத் தொடர்ந்து அவர் பெயரை வாக்காளர் பட் டியலில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் சட்டவிதி களின்படி பெயர் சேர்க்க முடியாது என தேர்தல் அதிகாரி மறுப்புத் தெரி வித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படிதான் செயல்பட முடியும் என்று மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.
இதனால் காதர்பீவியின் மனு ஏற்றுக் கொள்ளப் படுமா? என்ற நிலை ஏற் பட்டுள்ளது. எனவே அடுத்த கட்ட நடவடிக் கையாக கட்சித் தலை மையிடம் கலந்து சட்ட நடவடிக்கை மேற் கொள்ள உள்ளோம்.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை நடை முறைப் படுத்தக் கோரியும், நெல்லை மாநகராட்சி தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரியும் வழக்கு தொடர உள்ளோம்.
இதன் மூலம்தான் சிறுபான்மை சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.”" இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தெரிவித்தார்.
தகவல் : நல்லூரான்
கருத்துகள்