கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய.....................




கூடங்குள அணு உலைகளுக்குத் தமிழ்நாடு அரசு அளித்த அனுமதியில் இருந்து வெளிப்பட்ட விபரீத உண்மை

1988 நவம்பர் 20 ஆம் தேதியன்று சோவியத் அதிபர் திரு.கோர்பச்சேவும் இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களும் கூடங்குள அணுமின் திட்டத்தில் கையெழுத்திட்டனர்.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த அந்த நாளில் ஆளுனராகப் பதவி வகித்தவர் திரு.பி.சி.அலெக்சாண்டர்.

1989 ஜனவரி 29 இல் தி.மு.. ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த18 வது நாளில் - அதாவது 16-2-1989 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை கூடங்குள அணுமின் திட்டத்திற்கான தன் அனுமதியை வழங்கியது. அந்த அனுமதியில் கையொப்பமிட்டவர் தமிழக அரசின் செயலாளராக இருந்த திரு.D.சுந்தரேசன் IAS.

அவர் வழங்கிய அனுமதியானது தமிழக அரசிற்கு அணு உலைகள் குறித்து இருந்த அறிவின்மையையும், அசிரத்தையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இரண்டு 1000 மெகாவாட் வி.வி..ஆர் அணு உலைகளுக்கே அணுசக்தித் துறை அனுமதி கோரியிருந்தது. ஆனால் தமிழக அரசோ எவ்வளவு மெகாவாட் அணு உலைகளுக்கு என்றெல்லாம் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அணு உலைகளுக்கு அனுமதியை வழங்குவதாக அறிவித்தது!

ஏழு மாதம் கழித்து தமிழ்நாடு அரசின் செயலாளராக இருந்த திரு.A.S.ஜெயச்சந்திரன் BA அவர்கள் 13.9.1989 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தமிழ்நாடு அரசிற்கு அணுசக்தி என்றால் என்ன என்றே தெரியாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.

அணு சக்தித் துறை அனுமதி கோரியிருந்த இரண்டு 1000மெகாவாட் அணு உலைகளுக்குப் பதிலாக அவர் நான்கு 500மெகாவாட் அணு உலைகளுக்கு அனுமதியை வழங்கிவிட்டிருந்தார்!

அதோடு நிற்கவில்லை! இந்த அனுமதியை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் தலைவர், கூடங்குளத் திட்டத்திற்கான நிர்வாக இயக்குனர், பாபா அணுசக்தி ஆய்வுக் கழகத்தால் முன்மொழியப்படும் ஒரு உறுப்பினர், மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு உறுப்பினர் ஆகியோர்களால் ஆன ஒரு சிறப்புக் குழு பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அடுத்து வந்த காலத்தில் அவரால் கூறிப்பிடப்பட்டிருந்த சிறப்புக்குழுவானது தவறாக அளிக்கப்பட்டிருந்த அந்த அனுமதியை மாற்றியமைக்க எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை!

கருணாநிதி அரசால் நான்கு 500 மெகாவாட் அணு உலைகளுக்கு வழங்கப் பட்ட தவறான அனுமதியைக் கொண்டே இன்று கூடங்குளத்தில் இரண்டு 1000 மெகாவாட் அணு உலைகளின் கட்டுமானப் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது!

அணு உலைக் கட்டுமானப் பணியினைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா கூட கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்ய இன்றுவரை எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை!

THANKS :-

டாக்டர்.வீ.புகழேந்தி MBBS, கல்பாக்கம்

- டாக்டர். ரா.ரமேஷ் MBBS, கோவை

http://kudankulam2011.wordpress.com/




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?