இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராதா தோழர் திருமா வளவன் அவர்களின் தொப்புள் கொடி உணர்வு பாராட்டகூடியது ! ! !

படம்
தொப்புள் கொடி உறவுகளின் ஆதரவோடு பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை ! ! ! எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராதா தோழர் திருமா வளவன் அவர்களின் தொப்புள் கொடி உணர்வு பாராட்டகூடியது ! ! ! பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர், பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுத ான் இதன் நோக்கம். இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது. மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, ப

லஞ்சம் கொடுப்பவன் மீதும் வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக !

படம்
மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சத்தியத்தை மறைக்க, அசத்தியத்தை நிலை நாட்ட லஞ்சம் கொடுப்பது பெருங்குற்றமாகும். ஏனெனில் நிச்சயமாக இது தவறான தீர்ப்புக் கூறவும், நிரபராதிக்கு அநீதமிழைப்பதற்கும், சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும். அல்லாஹ் கூறுகிறான்:மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188) நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்) சத்தியத்தை நிலைநாட்டுவதற்கும் அநீதியை தடுப்பதற்கும் லஞ்சத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லையெனில் அதற்காக லஞ்சம் கொடுப்பது மேற்கூறிய இலஞ்ச எச்சரிக்கையில் இடம்பெறாது. இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம்.

ஹிட்லர் மோடியின் கொலை வெறியாட்டம் சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது !

படம்
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ்ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது. குஜராத்தில் அகமதாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத்தில் கடந்த 2004 இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் மும்பையிலிருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்ததாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறையினரிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப்பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறிவித்த என்க

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் முதலாவது அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் !

படம்
பரமக்குடி (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் முதலாவதாக டாக்டர் எஸ்.சுந்தரராஜனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி - கூரிச்சாத்தி தம்பதியின் மகன் சுந்தரராஜ். 18.4.1950-இல் பிறந்தார். எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இவர், பரமக்குடியில் பொது மருத்துவமனையும், இவரது மனைவி டாக்டர் எஸ்.சரோஜினிதேவி குழந்தைகள் நல மருத்துவமனையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரமேஷ்குமார் (32) என்ற மகன் உள்ளார். மருத்துவமனைகளுடன் கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. பரமக்குடி நகரில் வாழும் அனைத்து சமூக மக்களிடமும் அன்போடும், சகோதர மனப்பான்மையுடனும் நடந்து கொண்ட இவர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவையும் செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இவர், 1980-இல் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக பிரிந்தபோ