பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் முதலாவது அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் !


பரமக்குடி (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் முதலாவதாக டாக்டர் எஸ்.சுந்தரராஜனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

முதுகுளத்தூர் அருகே கருமல் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி - கூரிச்சாத்தி தம்பதியின் மகன் சுந்தரராஜ். 18.4.1950-இல் பிறந்தார்.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற இவர், பரமக்குடியில் பொது மருத்துவமனையும், இவரது மனைவி டாக்டர் எஸ்.சரோஜினிதேவி குழந்தைகள் நல மருத்துவமனையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ரமேஷ்குமார் (32) என்ற மகன் உள்ளார்.

மருத்துவமனைகளுடன் கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன.

பரமக்குடி நகரில் வாழும் அனைத்து சமூக மக்களிடமும் அன்போடும், சகோதர மனப்பான்மையுடனும் நடந்து கொண்ட இவர், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவையும் செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இவர், 1980-இல் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அதிமுக பிரிந்தபோது ஜெயலலிதா அணி சார்பில் 1989-இல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 1991 மற்றும் 2011-இல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் அதிமுகவில் தொடர்ந்து 18 ஆண்டுகளாக மாவட்ட பொருளாளராக கட்சிப் பணியாற்றியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு குடிநீர் வசதி, பேருந்து வசதி செய்து தந்துள்ளார்.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களில் முதலாவதாக இவருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?