இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முஸ்லிம்கள் மீது படு கொலை தாக்குதல் நரேந்திர மோடி குற்ற வாளியே ! உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!

படம்
2002 இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் கள் படுகொலைத் தாக் குதல்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான ஆதாரங்களை, ஜகியா ஜஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் (அமிகஸ் குரியா) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை தந்திருக்கிறது. ரகசிய ஆவணம் அந்த அறிக்கை இன் னமும் ரகசிய ஆவண மாகத்தான் பாதுகாக் கப்பட்டு வருகிறது. என் றாலும், 1200 பேருக்கும் மேலானவர்கள் கொல் லப்பட்ட 2002 ஆம் ஆண்டு வன்முறைத் தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்து தகுந்த குற்றவியல் நட வடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட சிறப்பு விசா ரணைக் குழுவுடன் அமி கஸ் குரியா வழக்கறி ஞரின் அறிக்கையின் தகவல்கள் இப்போது பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன. நரேந்திர மோடி மீது எந்த வழக்கும் தொடர முடியாது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி வித்து இருந்த கருத்தை வழக்குரைஞரின் அறிக்கை ஏற்றுக் கொள்ள பலமாக மறுக் கிறது என்று அகமதா பாத்தில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் பிரபல ஓர் ஆங்கில நாளிதழுக்கு தெரிவிக் கின்றன. இந்துக்கள் தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்ள அனு மதிக்க வேண்டும் என்று காவல் த

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

படம்
பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கடந்த வாரம், பத்திரிக்கையாளர்களோடு சந்திப்பு நடத்தி அதில் உரையாற்றினார். அவரது இந்த உரை, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் படிக்க வேண்டியது. முக்கியத்துவம் கருதி, மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன். தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் ப

ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.!

படம்
ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல்போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும். அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவ., 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். மேலும், நவ., 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும், அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக, பொதுமக்கள் பதிவு

விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற முஸ்லிம் மேல் நிலை பள்ளி !

படம்
ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லிம் மேல் நிலை பள்ளி பரமக்குடி கல்வி மாவட்ட அளவில், கமுதி அருகே பெருநாழியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவ-மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில், பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14, 17, 19 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழ், கேரம், டேக்வாண்டோ, எறிபந்து, சிலம்பம், நீச்சல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று மொத்தம் 301 புள்ளிகளைப் பெற்றனர். தனித்திறன் போட்டியில் டி. அஜித்குமார் என்ற மாணவன் 100, 200 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று, தனித்திறன் போட்டிக்கான சாம்பியன் பட்டம் வென்றார். ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற இப்பள்ளிக்கு, திங்கள்கிழமை பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஜே.ஆர்.ஐசக் சுகிர்தராஜ், அப்பள்ளித் தாளாளர் எம். சாதிக் அலியிடம் கேடயத்தை வழங்கினார். பின்னர் அவர், வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆச

கிரண் பேடி அவர்கலே .........அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ? ? ?

படம்
அன்னா ஹசாரே போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கிரண் பேடி பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அரசியல்வாதிகள் ஊழல் பேர்விழிகள் என்றும், அன்னா ஹசாரேதான் இந்தியாவின் விடிவெள்ளி என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் பேசினார். அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ? உங்களின் கடந்த கால தவறுகள் எப்படி இருந்தாலும், தோண்டி எடுத்து கண்டு பிடிக்கப் பட்டு விடும். மிக மிக கவனமாக, அது வெளியில் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், நிச்சயமாக அது கண்டுபிடிக்கப் படும். அப்போது, நீங்கள் பேசிய பேச்சுக்களும், எடுத்த நிலைபாடுகளும் உங்கள் முகத்தில் அறையும். இத்தனை நாட்களாக நீங்கள் கவனமாக கட்டிக் காத்து வந்த உங்களின் இமேஜ் சரி செய்ய முடியாத அளவுக்கு அதள பாதாளத்தில் வீழ்ந்து போகும். அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. 1979ம் ஆண்டில் கிரண் பேடிக்கு வீரதீரச் செயல் புரிந்ததற்கான விருது வழங்கப் பட்டுள்ளது. பிப்ரவரி 2001ல் வெளியான சுற்றறிக்கையின் படி, வீர தீர விருது பெற்றவர்களுக்கும், அவரோடு பயணம் செய்யும் ஒருவருக்கும், ஏர் இ

ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் !

படம்
ஒரு ஜாமத்தில் இரண்டு கவுன்சிலர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எமேனேஸ்வரம் ஜாமத்தை சார்ந்த இரண்டு கவுன்சிலர்கள் இரு வேறு வார்டுகளில் தேர்ந்து எடுத்து உள்ளர்காள் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கு இவர்கள் பெற்ற வாக்கு விபரம் 3 வார்டு- நூர்ஜஹான் அ தி மு க -592 ,சர்மிளா ராணி -தி மு க -382 ,கமிலா பீவி மு லீக் 101 அதை போன்று 14 வது வார்டில்- அப்துல் மாலிக் -356 ,சரவணன் பி ஜெ பி -325 சரவவணன் தி மு க 229 ,மேலும் பரமக்குடி நகராட்சி இல் மொத்தம் 4 முஸ்லிம் கவுன்சிலர்கள் தேர்ந்து எடுத்து உள்ளர்கால்

தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால்,..............

படம்
அக்.17: தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணித்தனர்.கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும், 4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்பு

கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய.....................

படம்
கூடங்குள அணு உலைகளுக்குத் தமிழ்நாடு அரசு அளித்த அனுமதியில் இருந்து வெளிப்பட்ட விபரீத உண்மை 1988 நவம்பர் 20 ஆம் தேதியன்று சோவியத் அதிபர் திரு . கோர்பச்சேவும் இந்தியப் பிரதமர் திரு . ராஜீவ் காந்தி அவர்களும் கூடங்குள அணுமின் திட்டத்தில் கையெழுத்திட்டனர் . தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த அந்த நாளில் ஆளுனராகப் பதவி வகித்தவர் திரு . பி . சி . அலெக்சாண்டர் . 1989 ஜனவரி 29 இல் தி . மு . க . ஆட்சி அமைத்தது . ஆட்சி அமைத்த 18 வது நாளில் - அதாவது 16-2-1989 அன் று தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை கூடங்குள அணுமின் திட்டத்திற்கான தன் அனுமதியை வழங்கியது . அந்த அனுமதியில் கையொப்பமிட்டவர் தமிழக அரசின் செயலாளராக இருந்த திரு . D. சுந்தரேசன் IAS. அவர் வழங்கிய அனுமதியானது தமிழக அரசிற்கு அணு உலைகள் குறித்து இருந்த அறிவின்மையையும் , அசிரத்தையையு ம் வெளிப்படுத்துவதாக அமைந்தது . இரண்டு 1000 மெகாவாட் வி . வி . ஈ . ஆர் அணு உலைகளுக்கே அணுசக்தித் துறை அனுமதி கோரியிருந்தது . ஆனால் தமிழக அரசோ எவ்வளவு மெகாவாட் அணு உலைகளுக்கு என்றெல்லாம் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அணு உலைகளுக்கு அனுமதியை வழங்க

அன்னா ஹசெற வின் மௌன விரதம் ? நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ! ! !

படம்
காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே தீடீரென்று மெளன விரதம் இருக்க போவதாக சொன்னார். அதைக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், "கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அன்னா குழுவில் உறுப்பினராக உள்ள பிரசாந்த் பூஷன் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்க்கவே அன்னா மெளனவிரதம் இருக்கிறார்" என்று கூறினார். "காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே ஏன் பி.ஜே.பிக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை" என்று கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், "குஜராத்தில் கடந்த 9 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா இல்லாமல் இருந்த போதும் அதைக் குறை கூறாமல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அன்னா புகழ்ந்தது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினார். "இது மாதிரி செயல்பாடுகளை இரட்டை நிலைப்பாடு என்று சொல்லாமல் எப்படி சொல்வது?" என்று கேட்ட திக்விஜய் சிங், "அன்னா, தனக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருக்கிறது என்பதை ஒப்பு கொள்ள ஏன் மறுக்கிறார்?" என்றார். "அன்னாவோ தன் போராட்டத்தில் ஒரு ஆ

இஸ்லாமிய சட்டம் அனைவருக்கும் சமமே !

படம்
சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள சக இளவரசர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக, குவைத் இளவரசர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. குவைத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இளவரசர் ஷேக் ஃபைஸல் அல் அப்துல்லாஹ் அல் சபாஹ் என்கிற அரச குடும்பத்து இளவரசர் தன் சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா அல்சலிம் என்கிற மற்றோர் இளவரசரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளியான இளவரசர் ஷேக் ஃபைஸல் குவைத் இராணுவத்தில் 'கேப்டன்' அந்தஸ்தில் பணிபுரிபவர் ஆவார். கடந்த 2010 ஜூன்மாதம் கொலையுண்ட ஷேக் பாசிலைக் காண அவரது அரண்மனைக்கு வந்த ஷேக் ஃபைஸல் 'உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைச் சற்று வெளியே அழைத்ததாகவும், அதன் பின் ஒருசில நிமிடங்களில் துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு மற்றவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, இரத்தவெள்ளத்தில் ஷேக் பாசில் கிடந்ததாகவும், அவசரமாக முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றும் பலனின

ஃபேஸ்புக்கில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.! ! !

படம்
பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு ? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலமானவர்கள் போன்ற பரபரப்பாக இயங்குபவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால் , ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சிலரின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் கிராமத்தினரும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம். காலையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. நான் வருத்தமாக இருக்கிறேன்