ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !
இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்சின் முன்பு ஆஜரான ஹாதியா வழக்கில் தனது கணவருடன் செல்லவும், தனது படிப்பை தொடரவும் அனுமதி அளிக்க கோரினார். ஆனால் அவரது கணவனுடன் செல்வது குறித்து எதுவும் கூறாமல் அவரது மருத்துவ படிப்பை சேலத்தில் தொடரவும் அவர் படிப்பிற்கான செலவை அரசை ஏற்றுக் கொள்ள சொல்வதாகவும் கூறினர். மேலும் அவருக்கு கல்லூரி டீனை பாதுகாப்பாளராக நியமித்தனர்.
ஹாதியா தான் 11 மாதங்களாக சட்ட விரோத காவலில் இருப்பதாகவும் தனக்கு அரசு செலவில் படிக்க விருப்பம் இல்லை தனது கணவர் தனது கல்விச் செலவை கவனித்து கொள்வார் அவரே தனது பாதுகாவலர் வேறு யாரும் தேவையில்லை எனது கணவனுடன் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.
நீதிபதி சந்திர சூட் மனைவிக்கு கணவன் பாதுகாவலனில்லை. நான் எனது மனைவிக்கு பாதுகாவலனில்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார். சட்டப்படி கணவன்தான் மனைவியின் பாதுகாவலன் அவன்தான் மனைவிக்கு வாழ்க்கை பொருளாதரத்தை அளிக்க வேண்டும். இது கூட நீதிபதி சந்திர சூடுக்கு தெரியவில்லையா அல்லது மதவெறி கண்ணை மறைக்கிறதா ?
25 வயதான,திருமணமான பெண் தனது விருப்பபடி செயல்பட சட்டத்தில் வழியிருந்தும் அனுமதிக்காத நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது.
தலமை நீதிபதி தீபக் மிஸ்ரா குழுதான் பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரிக்க போகிறது. இந்த நீதிபதிகள் பாபரி மஸ்ஜித் வழக்கை எப்படி நடத்துவார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. மூன்று நீதிபதிகளில் இருவர் பிராமணர்கள் என்பது கொசுறுத் தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?