இடுகைகள்

முஸ்லிம்களை, தங்களின் வாக்கு வங்கியாக கருதும் போக்கு நீண்ட நாளைக்கு நீடிக்காது !

படம்
உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ,முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க, அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், தேர்தலுக்குத் தேர்தல் இப்படி கண்துடைப்புக் காரியங்களில் ஈடுபடாமல், முஸ்லிம்களுக்குரிய இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று அகில இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது. அ.இ.மு.ஐ.மோர்ச்சா தலைவர் எம்.ஏ.சித்திக் கூறுகையில் பல பிரச்னைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மாயாவதி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படி கடிதம் எழுதுவதை விட்டு விட்டு, மாநிலத்தில் பிற்பட்டோருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 8.44 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க முன்வரவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப் படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை மாயாவதி அரசு அமல்படுத்தா விட்டால், அவர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதெல்லாம், அடுத்த சட்டசபை தேர்தலை கருத்தில...

அறிந்து கொள்வோம் நமக்கு எத்தனை ஒட்டு !

படம்
உள்ளாட்சி தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள்ளுக்கு, 2 ஓட்டு மாநகராட்சி :மேயர்க்கு,1 கவுன்சிலர்க்கு 1 நகராட்சி : தலைவர்க்கு 1, கவுன்சிலர்க்கு 1 பேரூராட்சி :தலைவர்க்கு 1, கவுன்சிலர்க்கு 1 கிராமப்புற வாக்காளர்கள்க்கு 4 ஓட்டு ஊராட்சித் தலைவர்க்கு 1 ஊராட்சி உறுப்பினர்க்கு 1 ஒன்றிய கவுன்சிலர்க்கு 1 மாவட்ட கவுன்சிலர் க்கு 1

குஜராத்தில் சர்வாதிகார ஆட்சி ! தேசிய மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு ! ! !

படம்
கு ஜராத்தில் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு நாடு முழு வதும் உள்ள மக்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த துடன் போராட்டங்கள், தர்ணாக்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன. கோத்ரா நிகழ்வுக்குப் பிந்தைய வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட இந்து வெறியர்களைக் கட்டுப் படுத்த வேண் டாம் என்று முதல்வர் நரேந்திர மோடி காவல் துறைக்கு உத்தரவிட் டதை காவல்துறை அதிகாரி சந்தீப்பட் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைத் தது நரேந்திரமோடி அரசு. மோடியின் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுடில்லி ஜந்தர்மந்திரில் மனித உரிமை ஆர்வலர்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர். குஜராத் அரசு கைது செய்த அய். பி.எஸ். அதிகாரி சந்தீப் பட்டை உடனடியாக விடுதலை செய்ய வேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் சப்னா ஆஸ்மி கூறுகையில், சந்தீப் பட்டின் கைது நடவடிக்கையைக் கண் டித்து நாடு முழுவதும் 40 நகரங்களில் எதிர்ப் புப் போராட்டம் நடை பெற்று வருகிறது என் றார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கு இல...

வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசாதீர் !

படம்
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப் பட்டுள்ள மொபைல் போன் இல்லாதவர்களே இன்று இல்லை எனலாம். நமது வசதிக்காக வரப்பிரசாதம் போல் கிடைத்து உள்ள இவற்றை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். நமக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனத்தை நம் உயிருக்கு உலை வைக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களை ஒட்டிச்செல்லும் போது மொபைல் பேசுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆங்காங்கே ஏற்படும் விபத்துக்களுக்கு மொபைல் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் காரணமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரும் , கார் , லாரி டிரைவர்களும் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. ஒவ்வொரு வாகன விதிமீறல் களையும் சட்டம் போட்டு தடுப்பது என்பது இயலாத காரியம். தங்கள் உயிர் , குடும்பம் மேல் அக்கறை உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் விபத்துக்கள் குறையும். சாலையோர விளம்பரப் பலகை விழ...

800 வீட்டு முன் அர்சி மூடை பின்னணி என்ன ?

படம்
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விலங்கல்பட்டு பஞ்சாயத்தில், விலங்கல்பட்டு, விலங்கல்பட்டு காலனி, பெத்தாங்குப்பம், குழந்தைக்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராம்ங்களில் 650 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 1,650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சரவணன், ராமதாஸ், சுந்தரவதினி ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நேற்று முன்தினம் அதிகாலையில் 600 அரிசி மூட்டைகளை (ஒரு மூட்டை 25 கிலோ எடை கொண்டது) ஒரு வீட்டுக்கு ஒரு மூட்டை வீதம் யாரோ அனைத்து வீட்டு வாசல்களிலும் கொண்டு வந்து வைத்து விட்டு சென்று இருந்தனர். காலையில் எழுந்து வந்து வீட்டு வாசலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த அரிசி மூட்டைகளை கோவில்களிலும், மந்தக்கரை மைதானத்திலும் கொண்டுபோய் வைத்து விட்டனர். வீட்டு வாசல்களில் வைத்தவர்களே அந்த அரிசி மூட்டைகளை எடுத்து சென்று விட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று அதிகாலையில் மீண்டும் 2-வது நாளாக விலங்கல்பட்டு காலனியில் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை 200 வீட்டு வாசல்களில் யாரோ வைத்து விட்டு சென்று விட்டனர். இப...

திருமணத்திற்காக வைத்திருந்த 2 லட்ச ரூபாய் ....................

படம்
திருமணத்திற்காக வைத்திருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரை ராமநாதபுரம் வெளிபட்டிணம் கீரைக்காரதெருவில் உள்ள எஸ்ரபீக் மற்றொரு ரபீக் ஆகியோரின் வீடுகளில் நேற்று மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. இதில் திருமணத்திற்காக எஸ்.ரபீக் வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பிரிட்ஜ், மரக்கதவுகள் உள்ளிட்ட 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பரமக்குடி யில் அணைத்து கட்சியீனரும் தீவிர பீரச்சாரம் !

படம்
பரமக்குடி நகராட்சித் தலைவர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். எமனேஸ்வரம் பகுதியில் ஜீவாநகர், கிறிஸ்தவத் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் அவர் வாக்குச் சேகரித்தார். அதிமுக நகர் செயலாளர் எம்.கே. ஜமால், மாவட்டப் பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ். சுந்தரராஜ் மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களும் தெருத்தெருவாகப் பிரசாரம் மேற்கொண்டனர். அதை போன்று பரமக்குடி 19 ,29 ,30 ஆகிய வர்டுஹளில் ம ம க வினர் தீவிர வாக்கு சேஹர்ரிபில் த மு மு க மற்றும் ம ம க வீனர்களுடன் சமுதாய ஆர்வம் கொண்ட சஹோதர்ஹலூம் கல பனி ஆற்றி கொண்டு இருக்கீறார்கள்

அன்பே உருவான அம்மா. பாகம் – 1

படம்
அன்பே உருவான அம்மா…! அல்லாஹ்வுடைய அருளும் பாதுகாப்பும் கிடைத்து நீங்கள் நல்ல சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எழுதிய அன்புக் கடிதம் என் கரம் கிட்டியது. எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதற்கு பதில் எழுத தாமதித்து விட்டேன். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும் என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதேபோன்று, நான் என்னுள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக் கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைக் காண ஓடோடி வர வேண்டும் என என்னுள்ளம் அவாவுறுகின்றது. எனினும், நான் பெற்றுவரும் சன்மார்க்க கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்த தடை இல்லாவிட்டால் நான் ஒரு கணமும் உங்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில், மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களைப் பரிந்திருப்பதை சகித்துக் கொள்ளச் செய்கின்றது. இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கின்றது. நான் கழிக்கும் ஒவ...

அன்பே உருவான அம்மா. பாகம் – 2

படம்
இறையொளியால் என் உள்ளம் நிறைந்து இருக்கிறது என் அம்மா! நான் உங்கள் மகன். நான் இஸ்லாத்தை ஏற்குமுன், இஸ்லாமியப் பாதையிலான பயணத்தை ஆரம்பிக்குமுன், எத்தகைய கெட்ட செயல்களை உடையவனாக இருந்தேன் என்பது நீங்கள் அறியாதது அல்ல. திருடுவது, பொய் சொல்வது போன்றவை அப்போது எனக்கு மிகச் சிறிய விஷயங்கள். எந்தக் கணமும் இத்தகைய தீமைகளில் மிக தைரியமாக ஈடுபட பின் வாங்கியது இல்லையே! அந்த அளவுக்கு தீய எண்ணங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமித்து இருந்தன. என்னுடைய தரங்கெட்ட வார்த்தைகள், தமாஷ்கள், நிந்தனைகள் எத்தனை பேரின் கண்களில் நீர் மல்கச் செய்திருக்கும்? ஆனால் இன்று, இப்படி ஒரு தீர்மானம் எடுத்ததன் பின்பு, இஸ்லாத்தை என் வாழ்வோடு ஒன்றிவிட்ட மார்க்கமாக ஏற்றதற்குப் பின்னர், இறையொளியால் என் உள்ளம் நிறைந்து காணப்படுகிறது. பாவ இருள்கள் முற்றாக நீங்கி விட்டுள்ளன. என்னைப் படைத்த நாயன் ‘இவை கெட்டவை’ எனத் தடுத்தவற்றை நான் எப்படியம்மா தைரியமாகச் செய்ய முடியும்? அது அவனுடைய கூற்றைப் புறக்கணிக்கும் கொடிய குற்றமல்லவா? அன்புள்ள என் அம்மா! நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறைக்குப் பெயர் இஸ்லாம். அது முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வால் ...

சமூக நீதியை நிலை நாட்டிய ம.ம.க ! நாயுடு , கவுண்டர் சமுக மக்கள் ஆதரவு ! ! !

படம்
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாள ர்கள் களமிறங்கி கலக்கி வருகிறார் கள். முஸ்லிம்கள், இந்துக்கள், தலித்துக்கள், கிருத்தவர்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கி சமூக நீதியை ம.ம.க நிலை நாட்டியுள்ளது. போட்டியிடும் 6 நகராட்சிகளில் கூத்தாநல்லூர் நகராட்சியை ம.ம.க திருவாரூர் மாவட்ட துணைச்செயலாளர் பிரபுதாசுக் கும், போட்டியிடும் 15 பேரூராட்சிகளில் சோழபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை தஞ்சை(வ) மாவட்ட மமக துணைச் செயலாளர் சரவணனுக்கும், காட்டுமன்னார்குடி பேரூராட்சி தலைவர் பதவியை இன்ஜினியர் விமல்ராஜுக்கும் ஒதுக்கியுள்ளது. ஊராட்சி மன்றம் உள்ளிட்ட மற்ற பல பதவிகளுக்கும் இதே போன்று பல்வேறு சமூக மக்களுக்கும், மமக சார்பில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 73 பெண்களுக்கு பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெகிழ்வுமிக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரில் முஸ்லிம்கள், நாயுடுகள், கவுண்டர்கள் சம அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு ஊராட்சி மன்றத்திற்கு 2&வது வார்டில் மமக சார்பில் சம்சாத்...

உண்மைகளுக்கு மாறாக யாராவது அவதூறு பரப்பினால், மறுமையில் வல்ல ரஹ்மானின் முன்பு வழக்கு தொடுப்போம் ! ! !

படம்
தமுமுக தலைமையின் விளக்கம் கோவையில் 1997 நவம்பர்-டிசம்பரில் வரலாறு காணாத கலவரம் நடைபெற்றது. 19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் சூறையாடப்பட்டன. மக்கள் இவ்வாறு பரிதவித்து நின்ற நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் தற்போது ததஜ அபிமானியாக இருக்கும் ஜி.எம். ஷேக் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து கோயம்புத்தூர் நிவாரண நிதியைத் தொடங்கினார்கள். இந்த நிவாரண நிதிக்கு தமிழகத்தில் உள்ள பொது மக்களிடமிருந்தும் வெளி நாட்டில் பணியாற்றும் இந்தியர்களிடமிருந்தும் மட்டுமே நிதிப் பெறப்பட்டது. இந்த நிதிகள் அனைத்தும் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் கோயம்புத்தூர் நிவாரண நிதி என்ற வங்கிக் கணக்கில் போடப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை யாக வழங்கப்பட்டது. இந்த சூழலில் மத்தியில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித் துறை மூலமாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதியின் நிர்வாகிகளான சைய்யது ...

இறைவன் மிக பெரியவன் ! ! ! வெற்றி ! வெற்றி ! வெற்றி !

படம்
இறைவன் மிக பெரியவன் ! ! ! வெற்றி ! வெற்றி ! வெற்றி ! மனித நேய மக்கள் கட்சியின் 14 வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ! 1. மீரான் மைதீன(2வது வார்டு) லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பெரம்பலூர் மாவட்டம் 2. நூருல்ஹீதா(17வது வார்டு) லெப்பைக்குடிகாடு பேரூராட்சி பெரம்பலூர் மாவட்டம் 3. எம்.சாதிக் பாட்ஷா (4வது வார்டு) தொண்டி பேரூராட்சி ராமநாதபுரம் மாவட்டம் 4. சம்சாத் பேகம்(2வது வார்டு) வழுதாவூர் ஊராட்சி விழுப்புரம் மாவட்டம் 5. எஸ்.ஷேக் முஹம்மத்(4வது வார்டு) கோணை ஊராட்சி விழுப்புரம் மாவட்டம் 6. சுல்தானா(3வது வார்டு) பண்டாரவடை ஊராட்சி தஞ்சாவூர் மாவட்டம் 7. பி. ஜீலான் பாஷா(1வது வார்டு) பேரிகை ஊராட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் 8. கே.அப்பாஸ்(8வது வார்டு) ஆய்யனார் ஊற்று தூத்துக்குடி மாவட்டம் 9.சுலைமான்(9வது வார்டு) ஆய்யனார் ஊற்று தூத்துக்குடிமாவட்டம் 10. ஷேக் முஹம்மது(3வது வார்டு) ஆழ்வார்திருநகரி கீழமேடு தூத்துக்குடி மாவட்டம் 11. எஸ். ஜியாவுதீன்(3வது வார்டு) மானியம் ஆடூர் ஊராட்சி காட்டுமன்னார்குடி ஒன்றியம் கடலூர் தெற்கு மாவட்டம் 12. முகமது(1வது வார்டு) கந்தகுமாரன் ஊராட்சி கீரப்பாளையம் ஒன்றியம் கடலூர் தெற்கு மாவட்டம் 1...

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 04 .10 .2011 )

படம்
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

நவராத்திரி பூஜை செய்யும் முஸ்லீம் பெண்கள் !

படம்
நரமாமிச மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் தான் இந்த இழிநிலை.இவர்கள் இணை வைத்து விட்டார்கள் இவர்கள் இசுலாமியர் இல்லை என சொல்லுவதை விட்டு விட்டு இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார் ?,இந்த நிலை ஏற்பட்டதற்கான காரணம் எது?இதன் பின்னணி என்ன? அகிலபாரதீய வித்யார்த்தி பரிசத் எனும் பெயரில்செயல் படும் நாசகர பாசிச காவி கூட்டத்தின் மாணவ அமைப்பின் உழைப்பின் பலனை பாரீர்.இவர்கள் தான் கல்லூரியில் பயிலும் நம் சமுதாய மாணவிகளை வழிகெடுப்பது.ஸ்மார்ட் பிரென்ட் எனும் பெயரில் பாசிச வெறி நாய்களை நண்பர்களாக அறிமுகம் செய்துவைத்து நம் சகோதரிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி வீட்டை விட்டு வெளியேற செய்து வழி கெடுப்பதுதான் இவர்களின் முக்கிய குறிக்கோள்.எச்சரிக்கை சகோதரர்களே.பெண்களை ரீசாஜ் கார்டு வாங்கி ரீசார்ஜ் செய்ய சொல்லுங்கள்.அல்லது வீட்டில் உள்ள ஆண்கள் ரீசார்ஜ் செய்து கொடுங்கள்.ஈசி ரீசார்ஜ் செய்யும் கடைகளில் இருந்து ஈசி ரீசார்ஜ் செய்யும் நம் சமுதாய பெண்களின் நம்பரை எடுத்து முதலில் மெசேஜும் பின்பு மயக்கும் வார்த்தைகளை பேசியும் வழிகெடுக்கும் யுக்தியை தற்போது கையாளுகின்றனர்.எனவே தயவு செய்து ஈசி ரீசார்ஜ் செய்வதானால் ஆண்கள...

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்வோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு ! ! !

படம்
வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயரைச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பின்னரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மேயர் வேட்பாளர் காதர் பீவி பெயர் சேர்க்க படாததால் நெல்லை மாநகராட்சி தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட் சித் தேர்தல் அக். 17, 19 ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சிக்கு அக். 17ம் தேதி தேர்தல் நடத்தப்படு கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முடிவடைந்தது. திமுக, அதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், காங் கிரஸ், தேமுதிக உட்பட 17 பேர் மனுத்தாக்கல் செய் துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் இந்திய யூனியன் முஸ் லிம் லீக் வேட்பாளராக மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலியின் புதல்வி காதர்பீவி மனு தாக்கல் செய்துள்ளார். இவரது வாக்காளர் பெயர் கணவர் ஊராகிய தென்காசி வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதனை நீக்கி விட்டு சொந்த ஊரான திரு நெல்வேலியில் வாக்காள ராக பதிவு செய்யுமாறு முறைப்படி மனுச் செய்தார். அதன்பின் மேயர் பதவிக...

TNTJ மாணவரணி மாநில நிர்வாகி சர்வத் கான் நீக்கம் !

படம்
கூத்தாநல்லூரில் இளைஞர் இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் TMMK வின் தமிமுன் அன்சாரி TNTJ வின் மாணவர் அணி மாநில நிர்வாகி சர்வத் கான் SDPI மாநில செயலாளர் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஒரே மேடையில் அமர்ந்து, ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி, ஒரே தட்டில் உணவருந்திய நிகழ்ச்சியை 'இணைந்தது சமுதாயம் எதிரிகள் அதிர்ச்சி' என்று வலைத் தள செய்தியிலும், குழுமங்களிலும் வந்தது ! அதை தொடர்ந்து 'சமுதாயம் மகிழ்ச்சி' எனும் பின்னூட்ட செய்திகள் வந்த போது சைத்தான் தான் வேலையை அண்ணன் மூலமாக உடனடியாக அரங்கேற்றினான். ஒற்றுமை எனும் வார்த்தையே எப்போதும் எட்டிக்காயாக கசக்கும் அண்ணனின் ஆணைப்படி குற்றத்திற்காக மாநில மாணவர் அணி நிர்வாகி சர்வத் கானை உடனடி நீக்கம் செய்து அறிவிப்பு வருகிறது. http://www.tntj.net/48395.html இது குறித்து சம்பந்தட்டவருக்கு அனுப்பட்ட மின்னஞ்சல் கடிதம் சர்வத் கான் அவர்களுக்கு, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! கடந்த 25/09/2011 கூத்தாநல்லூரில் நடந்த ஒரு இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் மற்றும் மாநில...

தேவர் ஜெயந்திக்கு கவனம் ? இமானுவேல் நினைவு நாளுக்கு மெத்தனம் ! ! !

படம்
த லித் மக்களுக்காக அயராது பாடுபட்ட தலித் இனத் தலைவர் தியாகி இமானுவேல் ஜாதிய வெறியர்களால் 54 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். வெட்டி படுகொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11 ம் நாளை தலித் மக்கள் தலித் தியாகி தினமாக அனுசரித்து விருகின்றனர். சில ஆண்டுகளாக மற்ற அரசியல் கட்சிகளும் இமானுவேல் நினைவு தினத்தில் மரியாதை செய்ய தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டும் அப்படித்தான் அமைதியாக அனுசரிக்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செய்ய வந்து கொண்டிருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்து போலிஸ் கைது செய்தது. இதை அறிந்து தான் அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் சாலை மறியல் செய்தனர். அப்போது நடந்த கலவரத்தில் 7 பேர் பலியானார்கள். பொது மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? கலவரம் ஏற்பட்டால் தொடக்கத்திலேயே துப்பாக்கி சூடு நடத்தலாமா? சிவகங்கையில் நடக்கும் தேவர் ஜெயந்திக்கு தமிழக முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வருவதால் போலிஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யு...

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 03 .10 .2011 )

படம்
எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி