இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமைக்குத் துவக்க உரை கொடுத்திருக்கும் கூத்தாநல்லூர் ! ! !

படம்
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்

விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் ! ! !

படம்
செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு. இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம். தொல்லை செய்ய வேண்டாம் என்று பதி

இஸ்லாமிய சகோதரர்களே...... நாம் மற்றவர்களை சார்ந்து இருப்பதைவிட வாருங்கள் நாம் சேர்ந்து இருப்போம் ! திருமா ! ! !

படம்
என் அருமை இஸ்லாமிய தோழர்களே ஆண்டாண்டாய் மறுக்கப்பட்டு வந்த தலித் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் நமக்கு வேண்டும். திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் காலி கவராக நினைத்துவிட்டனர். ஆகவே தான் விடுதலை சிறுத்தைகள் - இஸ்லாமிய கூட்டபைப்பும் சேர்ந்து ஒரு சமூக நல்லிணக்க கூட்டணியை அமைத்து உள்ளனர். பொதுவாக இஸ்லாமிய சகோதரர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பர். அதனால் தான் திராவிட கட்சிகள் நம்மீது சவாரி செய்கின்றனர். இது நமக்கான அதிகாரம் அதிகாரத்தை பறிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் நாளை வரலாற்றில் தலித் மாற்றும் சிறுபான்மை இனம் இருந்ததற்கான ஆதாரத்தையே அழித்து விடுவர். உங்களின் பலத்தை இந்த உள்ளாட்சி தேர்தலில் நிருபுயுங்கள். சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய சகோதரர் எஸ்.அமீர் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஈரோடு, கோவையிலும் இஸ்லாமிய கூட்டமைப்பு போட்டியிடுகிறது. உங்களின் அதிகாரம் உங்கள் கையில். இன்று திருமாவளவன் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர முடியாமல் போனதால் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்த்து கொள்ளவில்லை. அரசியலில் இஸ்லாமியர் பெருமளவ

ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை ! தோண்டத் தோண்டப் பிணங்கள் ! ! !

படம்
சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் தோண்டி எடுக்கப்பட்டன உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம் அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை சடலங்களை குழிவெட்டி அடக்கம் செய்த முதியவரான பரித்கான் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் காஷ்மீர் பற்றியெரிந்து கொண்டிருந்த முதல் பத்து வருடம் அதாவது 1990 முதல் போலிசும் ராணுவமும் கொண்டுவந்த 2500 க்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்களை தான் அடக்கம் செய்திருப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார் போன மாதம் வடக்கு காஷ்மீரின் சில மாவட்டங்களில் 38 சவக்கிடங்குகளில் 2730 அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன இவற்றுள் 574 சடலங்கள் பின்னர் அடையாளம் காணப்பட்டது இதன் பின்னர் மாநில மனித உரிமைக் கமிஷன் மாநிலத்தின் வேறு பல இடங்களிலும் இது போன்று பல்லாயிரம் பேரை ராணுவமும் போலிசாரும் கொன்று புதைத்திருக்கலாம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வி

மனிதநேயம் மலர ! மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட வாரியாக நான்காம் வேட்பாளர் பட்டியல் ! ! !

படம்
இன்ஷா அல்லாஹ் இறைவனீன் துணை உடன் இவர்களின் வெற்றிக்கு தூஆ செய்வோம் !

அதிகார அவைகளின் சமுதாய போர் குரல் ஒழிக்க ! மாவட்ட வாரியாக ம ம க வின் மூன்றாம் வேட்பாளர் பட்டியல் ! ! !

படம்
இன்ஷா அல்லாஹ் இறைவனீன் துணை உடன் இவர்களின் வெற்றிக்கு தூஆ செய்வோம் !

களத்தில் நெஞ்சுறுதி ! கொண்ட கொள்கையில் பிடிப்பினை ! ம ம க வின் இரண்டாம் வேட்பாளர் பட்டியியல் ! ! !

படம்
அரசியலில் பயணித்தாலும் தனித்தன்மை, சமுதாயத்துக்கான உன்மை அடையாளத்துடன் ம ம க வின் இரண்டாம் வேட்பாளர் பட்டியியல் ! இன்ஷா அல்லாஹ் இறைவனீன் துணை உடன் இவர்களின் வெற்றிக்கு தூஆ செய்வோம் !

அதிர போகிறது ! அரசியல் களம் ! ம ம க வின் முதல் வேட்பாளர் பட்டியல் !

படம்
அதிர போகிறது ! அரசியல் களம் ! ம ம க வின் முதல் வேட்பாளர் பட்டியல் தென் சென்னை வட சென்னை மாவட்டதிர்க்கு 18 வேட்பாளர் அறிவிப்பு ! தியாகம் ! நேர்மை ! மக்கள் செல்வாக்கு ! நிர்வாகத் திறன் ! சிறை தியாகங்கள் ! ! ! ஆகியவை முன்னனி அளவுகோல்களாக வைத்து இப்பட்யல் வெளி இட பட்டுள்ளது விபரம் 35 வார்டு A .நாகூர் கனி 38 வார்டு வருசை முஹமது 55 வார்டு முஸ்தபா 58 வார்டு செய்யது கரீம் 60 , வார்டு மீரான் 61 வார்டு RAUFரஹீம 63 வார்டு செய்யது உமர் ஹாஜியார் 68 வார்டு தஹிரா பேகம் 72 வார்டு சாய்ன்ஷா 94 வார்டு ரீகன பர்வீன் 104 வார்டு சுல்தானி 108 வார்டு முஹமது அலி 109 வார்டு சீனி முஹம்மது 115 வார்டு முஹமது ரசூல் 126 வார்டு முபீனா 129 வார்டு அஹ்மத் அலி ஜின்னாஹ் 141 வார்டு முஹமது இலியாஸ் 142 வார்டு அன்சாரி இவர்களின் வெற்றிக்கு நாம் அனைவரும் துஆ செய்வோமக.

தலைமை ஆணையிட்டால் எந்த முடிவையும் ஏற்போம் ! விரைவில் மமக வேட்பாளர் பட்டியல் ! ! !

படம்
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தன. அவற்றை ஆய்வு செய்து நேர்காணல் நடத்த மமக துணைப்பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக துணைப்பொதுச்செயலாளர் ஜெ.எஸ்.ரிபாயி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.ஹனீபா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு சென்னை, ஈரோடு, திருவாரூர், நெல்லை, ஓசூர், மதுரை ஆகிய ஊர்களில் மாவட்டங்களை 6 மண்டலங்களாகப் பிரித்து அந்த மண்டலங்களில் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வரவழைத்து நேர்காணல் நடத்தியது 6 நகரங்களிலும் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சிகள் பெரும் திருவிழாப் போல நடைபெற்றது. நகரமெங்கும் கொடிகள், வரவேற்பு பேனர்கள், பத்திரிக்கைச் செய்திகள் என கட்சியினர் உற்சாகமான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இது அங்கு வருகை தந்த விண்ணப்ப வேட்பாளர்களையும், கட்சியினரையும் மகிழ்ச்சியிலும், எழுச்சியிலும் ஆழ்த்தியது. காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல்கள் சென்னையில் இரவு 1மணி வரையிலும், மற்ற நகரங்களில் இரவு 11 மணி வரையிலும் நீண்டது. முஸ்லிம்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்க சரியா

மாநகராட்சி மேயராக முஸ்லிம் பெண் வேட்பாளர் !

படம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக காதர் பீவி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். இவரது கணவர் பெயர் சேக் செய்யது அலி. இவருக்கு முகமது கனி , என்ற ஒரு மகனு ம், ராஹீனா என்ற ஒரு மகளும், உள்ளனர்.

தேசிய சிறுபான்மையினர் கமிஷனில் தனி சட்டப் பிரிவு !

படம்
சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக, அவர்களின் நிலை, பிரச்னைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி, 110 பரிந்துரைகளை மத்திய அரசிடம் அறிக்கையாகச் சமர்ப்பித்தது. இதில் ஒரே ஒரு பரிந்துரைதான் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.இப்போது மீண்டும் சிறுபான்மையினரின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, சச்சார் கமிட்டி, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி ஆகிய 2 கமிட்டிகளும் அளித்த பரிந்துரைகளிலிருந்து, 15 பரிந்துரைகள் அடங்கிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.இந்தத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் வகையில் தேசிய சிறுபான்மையினர் கமிஷன் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதாவது, இந்த திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக, தனி சட்டப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது என்று அதன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது பெண்கள் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற "தேசிய சிறுபான்மையினர் கமிஷன் மற்றும் பெண்கள் கல்விக்கு கமிஷன் எடுத்து வரும் முயற்சிகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசி ன

நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் !

படம்
எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

புகை பிடிக்கும் சஹோ தார்ஹலே !

படம்
சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3 ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. மது குடிப்பவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னர் ஆய்வுகள் தெரிவித்தன. தற்போது சிகரெட் பிடித்தாலும் ஞாபக மறதி ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னை குறித்து டாக்டர் டாம் ஹெபர்னன் தலைமையில் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஆய்வு நடத்தியது. அதற்காக சிகரெட் பிடிப்பவர்கள் , அதை நிறுத்தியவர்கள் மற்றும் சிகரெட்டே பிடிக்காதவர்கள் என 3 பிரிவாக பிரித்து அவர்களின் நினைவாற்றலை சோதிக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டனர். அதில் சிகரெட் பிடிக்காதவர்களைவிட , பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3 ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படுவது தெரியவந்தது. அதாவது , நினைவாற்றல் சோதனையில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 59 சதவீத ஞாபக சக்தியும் , சிகரெட் பிடிப்பதை கைவிட்டவர்களுக்கு 74 சதவீதமும் , சிகரெட்டே பிடிக்காதவர்களுக்கு 81 சதவீத ஞாபக சக்தி இருப்பது தெளிவானது. சிகரெட் பிடிப்பதால் ஞாபக மறதி ஏற்படுவது குறித்து மேற்கொண்ட ஆய்வு , புகை ப

எமேனேசுவரத்தில் தரை பாலத்திற்கு பதிலாக மேம் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன் !

படம்
பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக சேது கருணாநிதி (வயது26) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பட்டதாரி. இவருக்கு சுதாராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். தற்போது இவர் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார். வேட்பாளர் சேது கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:- பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக அறிவித்த தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நகர சபை தலைவராக வெற்றி பெற்றால் பரமக்குடியில் உள்ள அனைத்து பிரச்சினை களுக்கும் தீர்வு காண் பேன். பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்து முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன். போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை ஆற்றின் இருபுறமும் ரோடு வசதி ஏற்படுத்தி தர பாடுபடுவேன். எமேனேசுவரத்தில் தரை பாலத்திற்கு பதிலாக மேம் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். புதிய நகரசபை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும். மாநகராட்சிக்கு இணையாக பரமக்குடி நகரசபையை கொண்டுவர பாடுபடுவேன். எனவே வருகிற உள்ளாட்சி தேர் தலில் என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பரமக்குடி நகராட்சி தி. மு. க. வேட்பாளர் திரு. சேது .கருணாநிதி !

படம்
பரமக்குடி நகராட்சி தி. மு. க. வேட்பாளர் திரு. சேது .கருணாநிதி ! பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக சேது கருணாநிதி (வயது26) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பட்டதாரி. இவருக்கு சுதாராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். தற்போது இவர் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார்.

பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கீர்த்திகா. வேட்பு மனுத்தாக்கல் செய்தார் !

படம்
பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கீர்த்திகா(நகராட்சி தலைவர்) நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான அன்வர்ராஜா, மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான முருகன், பரமக்குடி எம்.எல்.ஏ., டாக்டர் சுந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பாலுச்சாமி, நகர செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முனியசாமி உட்பட கட்சியினர் உடனிருந்தனர். கீர்த்திகா கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரயில்வே லைனையொட்டி, கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த வாறுகால் சீரமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி குப்பை வாகனம் மூலம் வார்டு முழுவதும் தொட்டிகள் அமைத்து நகர் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. பாதாளசாக்கடைத்திட்டம், புறவழிச்சாலைத் திட்டம், சூப்பர் மார்க்கெட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன, என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு பரிசீலனை !

படம்
மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை கடந்த இரண்டு வாரங்களாக பெற்று வந்தது. இது குறித்து பரிசீலனை செய்ய தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலளார் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக செப்டம்பர் 20 முதல் ஆய்வுகளை துவங்கியுள்ளனர். சென்னை, காஞ்சி, திருவள்ளுர்,கடலூர் மாவட்டங்களுக்கான பரிசீலனை கடந்த 2 நாட்களாக மமக தலைமையகத்தில் நடந்து முடிந்தது. 2-ம் கட்டமாக : 23 ஆம் தேதி ஈரோட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான பரிசீலனையும் 3-ம் கட்டமாக : செப்-24 அன்று ஓசூரில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான பரிசீலனையும் 4-ம் கட்டமாக : செப்-25 அன்று திருவாரூரில் திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கான பரிசீலனையும் 5-ம் கட்டமாக : 26 அன்று மதுரையில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் 6-ம் கட்டமாக : 27 அன்று

பர்தா அணிவதனால் ஏற்படும் நன்மைகள் !

படம்
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக, பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள். தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள். இவ்விரண்டு நன்மைகளுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்தமானதாகும். நன்கு சம அழகுள்ள இரு இரட்டைபிறவி சகோதரிகள் கடைவீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக்கின்றாள். இப்போது இவ்விரு பெண்களில் கடைத்தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந்திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடையணிந்திருக்கும் பெண்ணா? நிச்சயமாக குட்டை பாவாடையணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத்தெருவிலிருக்கும் சிலரின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களின் பாதுகாப்ப

பரமக்குடி நகராட்சி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு !

படம்
பரமக்குடி நகராட்சி அதிமுக வேட்பாளராக திருமதி கீர்த்திகா அறிவிக்கப்பட்டுள் ளார் பரமக்குடி நகராட்சி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கீர்த்திகா டிப்ளமோ மற்றும் எம்.ஏ., படித்துள்ளார். தற்போது பரமக்குடி நகராட்சி தலைவராக உள்ளார். இவரது கணவர் முனியசாமி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்..

சென்னையில் இருந்து 4088 பேர் ஹஜ் பயணம் !

படம்
தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்தனர். தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கீடு 3057 ஆகும். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் கூடுதலாக 761 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன மத்திய அரசின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் 241 இருக்கைகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் இருந்து 3810 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். அவர்களில் 1921 ஆண்கள்,1893 பேர் பெண்கள், இது தவிர புதுச்சேரியில் இருந்து 59 பேரும், அந்தமான் நிகோபரை சேர்ந்த 29 பேரும் சேர்ந்து 4088 பேர் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல இருக்கின்றனர். இவர்கள் பயணம் செய்யும் முதல் விமானம் வருகிற அக்டோபர் 17-ந் தேதி புறப்படுகிறது. புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 14 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பயணம் வருகிற அக்டோபர் 31-ந் தேதியுடன் நிறைவடையும். சவுதிஅரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. அவர்களுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உதவிகளை செய்கிறது. சவுதிஅரேபியா செல்லும் புனித ஹஜ் பயணிகளுக்கு வரு

நரேந்திர மோடி மற்றும் ஜெயலலிதாவைக் கண்டித்து ஐ.என்.டி.ஜே தடையை மீறி ஆர்பாட்டம் !

படம்
உலக அமைதிக்காக உண்ணாவிரதம் எனும் கபட நாடகத்தை அரங்கேற்றும் மோடியையும் அவருக்கு ஆதரவளித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் கண்டித்து இன்று தடையை மீறி I.N.T.J ஆர்பாட்டம் நடத்தியது. இதில் ஏரளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றனர். ஒரே நாளில் முடிவு செய்து போஸ்டரோ பிட் நோட்டிசோ இன்றி வெறும் எஸ்.எம்.எஸ். மூலம் திரட்டப்பட்டு நடை பெற்ற இந்த போராட்டம் அல்லாஹ்வின் அருளால் அனைத்து ஊடகங்களிளிலும் முக்கிய செய்தியானது. மேலும் லட்சக் கணக்கில் மக்களை திரட்டி கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் நிகழ்சிகளுக்கு கிடைக்காத ஊடக வெளிச்சம் இந்த போராட்டத்திற்கு கிடைத்தது அல்லாஹ் என்னத்திற்கு தான் வெற்றியை தருகிறான் எண்ணிக்கைக்கு அல்ல என்பதும் நமக்கு புரிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.

இதமாய் காப்போம் இதயம் !

படம்
40 வயதுக்கு மேல் உள்ள ஆண்களும் , 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மூச்சுத் திணறல் , தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி , நடக்கும்போது , ஓடும் போது , உயரமானப் பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிஷங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துகள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. பொதுவாக , இருதய நோய் உள்ளிட்ட எந்த நோயும் நம்மைத் தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரமாவது சீரான உடல் பயிற்சி செய்வது நல்லது. மேலும் , இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சிறிய அளவு உணவு சாப்பிட வேண்டும். முடிந்தளவு சாதத்தை தவிர்ப்பது நல்லது. இருதய நோயைத் தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகை

ராமநாதபுரத்தில் அரசு நல திட்ட உதவீகள் வழங்கும் விழா ! ம ம க M .L . A வழங்கினார் !!

படம்
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் உள்ளிட்ட மின் பொருட்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு லேப்டாப்&பும் வழங்கப்படும் என அதிமுக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த வகையில் கடந்த 15.09.2011 அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உச்பிப்புளி, அச்சடிபிரம்பு ஆகிய கிராமங்களில் 17.09.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களுக்கு மின்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய மின்பொருட்களும், மாணவ மாணவிகளுக்கு லேப்டாப்&புகளும் வழங்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இப்பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், முதுகளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தமுமுக மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான், மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மாவட்ட ஆட்சியர் அருண்ராய் ஆகியோர் கலந்துகொண்டனர்.